Monday, 17 January 2011

சண்முகா நகரில் சமத்துவ பொங்கல் 2011

பூக்கோலத்தோடு விழாக்கோலம்
மண்ணிவாக்கத்தின் சொர்க்கபுரியாம் நமது சண்முகாநகரிலே 16-01-2011 அன்று சமத்துவ பொங்கல் இதுவரை இல்லாத சீரோடும் சிறப்போடும் மிக பிரம்மாண்ட முறையிலே நமது நகர் மக்கள் அனைவராலும் சிறுவர் பூங்காவில் கொண்டாடப்பட்டது. நமது நகர் மகளிர் அனைவரும் இரவு பகலாக உழைத்து அழகான கோலங்கள் இட்டு விழா திடலை அலங்கரித்தனர்.

விழாத்திடல்
நகர் மக்களின் சிலம்பாட்டமும் பார்வையிடும் மக்களும்



ஆடவர்கள் அனைவரும் பொதுநல சங்கத்தினருடன் சேர்ந்து சுமார் ஒரு வார காலம் தங்கள் பங்களிபினை வழங்கி இந்த விழா மிகுந்த சிறப்பாக நடை பெற உழைத்தனர். திண்டுக்கல் இளைய நிலா தப்பாட்ட கலை குழுவினர் தங்கள் ஆட்டம் பாட்டங்களோடு இந்த பொங்கல் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.
அடுப்புகளை அருட்செல்வர் செல்வராஜ் பற்றவத்து துவக்குகிறார்.


பொங்கலோ பொங்கல்
விழாவிற்கு கடுமையாக உழைத்த வல்லவர்கள்
காட்சிகளை பதிவு செய்யும் சிவா அதை நோக்கும் ராகவன்.
தயாராகும் தப்பாட்ட கலைஞர்கள்.
கன்றை அடக்கும் காளை திரு.சுரேஷ்
மாட்டு வண்டி சவாரி
களை கட்டும் தப்பாட்டம்
பொங்கல் படையல்
மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.M.D.லோகநாதன் அவர்கள், துனைத்தலைவர் திரு.M.M. கிருஷ்ணன், திரு. பொண்ணுசாமி மற்றும் ஊராட்சிமன்ற உருப்பினர்கள், மற்றும் பிரபலமான அரசியல் தலைவர்கள் திரு. புருஷோத்தமன், திரு செல்வம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஞாயிறு போற்றும் திரு.லோகநாதன்
நமது நகரின் மகளிர் சுயஉதவி குழிவினர் ஒவ்வோர் குழுவினரும் ஒவ்வோர் பொங்கல் பானை வைத்து இயற்கைக்கு நன்று செலுத்தினர். தப்பாட்ட குழுவின் நடனம், மாட்டு வண்டி சவாரி, நகர் வாழ் குழந்தைகளின் கிராமிய நடனம் ஆகியவற்றை தொடர்ந்து சம பந்தி போஜனம் நடைபெற்றது. முடிச்சூர் ஆதீஸ்வரர் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள் இந்த சம பந்தி போஜனத்தில் இரண்டாம் ஆண்டாக வந்து பங்கேற்றனர்.
நகர் மக்களின் இயற்கை வழிபாடு
பெரியோர் வேடத்தில் சிறுவர்


மங்கையரின் ஆனந்த கும்மி

சிறுமிகளில் கிராமிய நடனம்
நடனம் களிக்கும் நகர் மாந்தர்


மனப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி வயக்காட்ட உழுது போடும் சிறுவர்கள்

சமபந்தி போஜனம்
சமபந்தி போஜனத்தில் கேப்டன் டிவி குழுவினர்
ஆதீஸ்வரர் இல்ல குழந்தைகள் உன்பதும் அவர்களுடன் பொது நல சங்க தலைவர் கோட்டீஸ்வரனும்
இந்த நிகழ்சிகளை எல்லம் ”கேப்டன் டிவி” குழிவினர் வந்து படம் பிடித்துக்கொண்டு சென்று தங்கள் கேப்டன் செய்திகளில் ஒளிபரப்பினர்.

ஒரு சில முக்கிய வீடியோ காட்சிகள் இங்கே

தப்பாட்டம்


நகர் மாந்தர் சிலம்பாட்டம்


மகளிர் குழுக்களின் சமத்துவ பொங்கல்




நகர் மக்கள் மாட்டு வண்டி சவாரி


மகளிர் சுய உதவி குழுவினர் கும்மி


ஆதீஸ்வரர் ஆதரவற்றோர் இல்ல குழந்தைகள்


10 comments:

அம்பர் முருகன் said...

தைத் திருநாள் பொங்கல் விழா பாச பொங்கலாக, ஒற்றுமை பொங்கலாக, சமத்துவ பொங்கலாக அனைவரும் இணைந்து மகிழ்ச்சி பொங்க சிறப்பாக கொண்டாடியது அறிந்து மிக்க மகிழ்ச்சி. தொடரட்டும் உங்கள் பணி.

முருகன் சுப்பராயன்
செயபிரகாசு நகர்
மண்ணிவாக்கம்

K said...

மகிழ்ச்சி பகிர்வுக்கு நன்றி திரு.முருகன்.

Anand said...

Matattra magizchi

Anonymous said...

Anand said...
Matattra magizchi

17 January 2011 7:06 PM

Same Blood

geetha said...

Really good.vazgha samathuva PONGAL.
Your photography Excellent.

Krubhakaran said...

thank u Geethamaa

Pushpa said...

Wow!! Shanmuga Nagar rocks!!Looks like all had fun...My mom could not restrain from talking about this event everyday...Heard that the ladies were all overjoyed....

Krubhakaran said...

Yes Pushpa, there were some Rocking Dance performance from Nagar ladies especially Mrs. Rama Mahendra.

yanmaneee said...

russell westbrook shoes
balenciaga shoes
yeezy boost 350
vans shoes
off white clothing
yeezy boost 350
kyrie 5 shoes
mbt shoes
jordan shoes
curry 5

Anonymous said...

original site a4v53i6a51 replica louis vuitton handbags replica bags bangkok webpage l6h21b7s51 replica bags buy online replica chanel bags ebay read review k9r65k8a55 Louis Vuitton replica Bags replica bags online pakistan