Tuesday 28 December, 2010

சண்முகா நகர் மக்களுக்கு மற்றுமோர் கொண்டாட்டமான நாள்

சண்முகா நகர் மக்களுக்கு மற்றுமோர் கொண்டாட்டமான நாள் கடந்த டிசம்பர் 25ம் தேதி அன்று.

நமது நகர் பகுதி முழுவதையும் பசுமையாகவே பராமரிக்கவும் புவி வெப்பமயமாதலை தவிற்கவும் நமது நகரில் இயங்கிவரும் மகளிர் சுய உதவி குழுக்கள், ”முத்தமிழ்” “நம்பிக்கை” ”கருணை” ” கீதாஞ்சலி” ’சாதனை” ஆகியவையும், ஸ்ரீ சண்முகாநகர்,விரிவு மற்றும் திருவேங்கடம் நகர்
குடியிருப்போர் பொது நல சங்கமும், சென்னை வளசரவாக்கம் முல்லைவணம் TREEBANK இலவசமாக வழங்கிய 100 மரக்கண்றுகளை சென்னை போரூர் Alfa Engineering College மானவர்களுடன் இனைந்து நமது நகர் பகுதி முழுவதும் நட்டனர், மரக்கண்றுகளை நட்டதோடு மட்டும் அல்லாமல் அவற்றை செவ்வனே பாதுகாத்து பராமரிக்கவும் உறுதி பூண்டனர்.
திருமதி.சாந்தி நரசிம்மன் நிகழ்சிகளை நடத்தி செல்கிறார்




விழா பிரமுகர்களும் நகர் மக்களும்
திருமதி. ரஜினி கோட்டீஸ்வரன் பேசுகிறார்
திரு.கோட்டீஸ்வரன் பேச்சு
திரு.ஜோசப் பெஸ்கி பேசுகிறார்.
திரு.மணிகண்டன் உரையாற்றிகிறார்.
நமது நகரின் 10வது தெருவில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் மகளிர் குழுக்களின் ஆண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. M.D.லோகநாதன் அவர்கள்,துனைத்தலைவர் திரு. M.M.கிருஷ்ணன் அவர்கள் மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களுடனும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விழாவில் மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(படப்பை) மேலாளர், அரசு அதிகாரிகள், மண்ணிவாக்கம் ஊராட்சியின் முன்னாள் உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள்,மகளீர் குழு கூட்டமைபின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தந்தார்கள்.
திருமதி.சிவகுமர் பேச்சு
பட்டிமன்றம்
அண்ணன் தம்பிகள் எதிர் எதிர் அனியில், திரு நரசிம்மன், திரு ஜானகிராமன்

திருமதி. ஜோசப் பெஸ்கி
சிறுமிகள் நடனம்
சிறுவர் சிறுமியர் நடனம்
இந்த இரு நல்ல நிகழ்சிகளின் சிகரமாக அருமையான பட்டி மன்றம் (குழந்தைகளை வளர்ப்பதில் அக்கால முறை சிறந்ததா? இக்கால முறை சிறந்ததா? )மற்றும் சிறுவர் சிறுமிகளின் இசை/நடன நிகழ்சிகளுடன் CHRISTMAS விழா கொண்டாடப்பட்டது.
நமது நகர் பகுதியினை பசுமையாகவே பராமரிக்க முயற்சியெடுக்கும்/ உறுதி பூன்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்வாங்கு வாழ வேண்டும்.

Tuesday 2 November, 2010

தீபாவளியும் மாசு கட்டுப்பாடும்

கீழே உள்ள விஷயங்களை துண்டு பிரசுரமாக நகர்மக்களுக்கு வினியோகிக்க முயல்கிறேன். நகர் மக்கள் ஒத்துழைப்பார்களாக.

ஒலியினை குறைப்போம் செவியினை காப்போம்.

அன்பான வேண்டுகோள்
தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிக செவிட்டு தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டு தன்மையையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிக ஓசையுடன் வெடிக்க கூடிய வெடிகளான நைட்ரஜன் வெடிகள், புல்லட் வெடிகள், எலக்ட்ரிக் வெடிகள் மற்றும் தொடர் சர வெடிகளை(1000,5000,10000 வாலாக்கள்) தவிர்த்து ஒளி அதிகம் தரக்கூடிய மத்தாப்பு வகைகளை பயன்படுத்தி கொண்டாடுவோம்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் போது ”தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்” பொது மக்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பின் வரும் ஆலோசனைகளை வழங்குகிறது.
  • இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
  • குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம்.
  • பட்டசு வெடிக்கும் போது அருகிலேயே ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்தல் நலம்(எதிர்பாராமல் ஏற்படும் தீயினை அனைக்க).
  • பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் புகை மாசினால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள். ஆஸ்துமா, ஒவ்வாமை(அலர்ஜி) போன்றவைகள் ஏற்படும் வாய்புகள் உள்ளன.
  • 120 டெசிபல் ஒலி அளவுக்கு கீழ் உள்ள பட்டசுகளை மட்டுமே பயன்படுத்துதல் நல்லது.
  • மருத்துவமனைகள், பள்ளிகள், நீதி மன்றங்கள் ஆகிய இடங்களில் வெடிகள் வெடிக்க கூடாது.

முடிந்த வரை குறைவான பட்டசுகளையே உபயோகிப்போம்.

இயன்ற வரை பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்போம், துனி பைகளை உபயோகிப்போம். மழை நீரை சேகரிப்போம். மரங்கள் நட்டு வளர்த்து மண் வளம் காப்போம்.


தீபாவளி பண்டிகயின் போது நமது கவணக்குறைவினாலும் அலட்சியத்தினாலும், விபத்துகள் ஏற்படாமல் இருக்க அதிக சத்தமுள்ள பட்டசுகளை தவிர்த்து மாசற்ற தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம்.

ஒலி மாசு ஓர் உயிர் கொல்லி புகை நமக்கு பகை.

குறிப்பு:-பொது நலம் கருதி தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் வினியோகித்த பிரசுரத்தை தழுவியது.


மக்களால் மக்களுக்காக
54,சண்முகா நகர் மண்ணிவாக்கம்.

Sunday 22 August, 2010

புதிய மின் மாற்றி(Transformer)


நம் நகர் மக்களின் நீண்ட நாள் தேவையாக இருந்த கூடுதல் மின் மாற்றி(Transformer), நமது நகர் பொது நல சங்கத்தினர் முயற்சியினாலும், முக்கியமாக சண்முகாநகர்,விரிவு மற்றும் திருவேங்கடம் நகர் குடியிறுபோர் பொது நல சங்கத்தின் உறுப்பினர்கள் மற்றும், திரு K.நரசிம்மன்(TNEB) அவர்களின் விடாமுயற்சியாலும் நமது நகரின் முதல் சாலையில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த மின் மாற்றியானது கூடிய விரைவில்(இந்த வாரத்திலேயே) செயல் படத்துவங்கி நகர் வாழ் மக்களின் மின் தேவைகளை நிறைவு செய்யும் என எதிர்பார்கிறோம். மின் மாற்றி நிறுவ பெரிதும் பாடுபட்ட சங்க உறுப்பினர்களுக்கு நகர் மக்கள் சார்பாக நன்றிகள் ஆயிரம்.

Sunday 15 August, 2010

64ம் விடுதலை நாள் 15 -08- 2010

இந்திய திரு நாட்டின் 64ம் விடுதலை நாளை நமது பகுதி மக்கள் சீரோடும் சிறப்போடும் 2 நாட்க்கள் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். 14-08-2010 அன்று நகர் சிறுவர்கள் கலை நிகழ்ச்சியும், நகர் மாந்தர்கள் நடித்த நாடகமும்
நடைபெற்றது.

15-08-2010 ஆம் நாள் இந்திய விடுதலை நாளை, ஊராட்சி மண்ற தலைவர் உயர் திரு. M.D.லோகநாதன் தலைமயில் நாட்டுக்கொடி ஏற்றி கொண்டாடிய நமது நகர் மாந்தர்கள், ஒரு முக்கிய நிகழ்வாக, புவியின் வெப்பத்தை குறைத்திடவும், பூமித்தாயை காத்திடவும் உறுதி எடுத்தனர். சென்னை CLAP(http://clapindia.blogspot.com/2009/03/claretian-life-animation-project.html) நிறுவனத்தின் வழிகாட்டுதலில், சண்முகா நகர் & விரிவு மற்றும் திருவேங்கடம் நகர் குடியிருப்போர்பொது நல சங்கம், சுதந்திர தின நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சுற்று சூழல் விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சியை ஏற்ப்படு செய்து இருந்தது.

  • தோண்றிய 450 கோடி ஆண்டுகளாக நலமாக இருந்த பூமி சமீபகாலமாக மிகவும் மாசு அடந்து வருகிறது, தண்ணீர், காற்று, மண் ஆகியவை மாசடந்து மிகவும் மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிண்றன. ஆகவே சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு குறித்து பல் வேறு விஷயங்கள் விளக்கப்பட்டன, அவற்றில் சில:-

    தண்ணீர் மாசு

    உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தூய குடி நீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

    அறிவியல் அறிஞர்கள் கருத்துப்படி 2025ல் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு தூய குடிநீர் கிடைப்பது அரிது.

    தூய நீர், பூச்சி கொல்லி மருந்து, தொழிற்சாலை கழிவுகளால் மசடைந்துள்ளது.

    இன்று ஒவ்வோர் இந்தியனும் 2 மில்லி கிராம் நச்சு பொருளை தன் உடலின் ஒவ்வொரு கிலோவிலும் சுமக்கிறான்.

    மரங்கள் வளர்பதின் அவசியம்

    ஒரு மனிதன் சுவாசிக்க 16 பெரிய மரங்கள் தேவை ஆனால் இந்தியாவில் 36 மனிதர்கள் ஒரு மரத்தை பகிர்ந்துகொள்கின்றனர்.

    மரங்கள் நிலத்தில் நீரை சேமிக்கின்றன. மரத்தின் வேர்கள் 33 சதவீதம் மழை நீரை சேமித்து வைக்கின்றன, எனவே

    மரங்கள் இல்லை என்றால் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வரும்.

    இந்தியா சீனா போன்ற நாடுகளில் பெரும்பாலன இடங்களில் ஆண்டுக்கு 1 1/2 மீட்டர் வீதம் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது.

    காற்று மாசு.

  • மாசு பட்ட காற்றினால் சுமார் 22 லட்சம் மக்கள் ஒவ்வோர் ஆண்டும் மடிகின்றனர், அதிகரித்து வரும் வாகனங்களும்
    தொழிற்சாலைகளும் இதற்கு காரணம்.

    பூமியிலிருந்து சுமார் 5 அடி உயரம் வரை காற்று மிகவும் மாசடைந்துள்ளது, எனவே காற்று மாசினால் குழந்தைகள்
    அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    மாசடைந்துள்ள காற்றினால் பூமி மிகவும் வெப்பம் அடைகின்றது.

    புவி வெப்பம் 3 டிகிரி உயர்ந்தால் காடுகள் பாதிக்கும் மேல் அழிந்து சிதைந்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடதுவங்கும்.

    வெப்பம் காரனமாக வட தென் துருவங்க்களில் பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் உயரும். கடல் மட்டம் உயர்வதால் பல தீவுகள் காணாமல் போகும்.

    உலகில் உள்ள கடற்கரையோர பகுதிகள் கடலில் மூழ்கி விடும்.

    கடல் நீர்மட்டம் 1 மீட்டர் உயர்ந்தால் கடலோர பகுதிகளில் உள்ள 4 முதல் 8 கோடி மக்கள் வேறிடங்களுக்கு சென்றாக வேண்டும்.


    மண் மாசு.


    பூமியின் மேல் பகுதியில் உள்ள முதல் 6 அங்குல மண் தான் வளமானது.

    மரங்கள் வெட்ட படுவதால் இந்த மண் மழை நீரினால் அடித்து செல்ல படுகிறது.

    மேலும் பல தேவைகளுக்கு பூமியின் மேற்பரப்பில் உள்ள மண்ணை பயன் படுத்துவதால், நிலம் விவசாயத்திற்க்கு பயன் படாமல் போகிறது.

    விவசாய நிலத்தில் அதிக அளவு ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன் படுத்துவதால் ஒரு குறிப்பிட்ட
    வருடங்களுக்கு பிறகு நிலம் பயனற்று போகிறது.

    ஒவ்வொரு நாட்டிற்க்கும் 33% நிலம் காடு வளர்பிக்கு தேவை படுகிறது.

    இந்தியாவில் உள்ள மொத்த நிலத்தில் 10.5 % தான் காடுகள் உள்ளன.

    இவற்றை தவிற்க்க பூமி தாயை காக்க மக்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழி:-

    மரங்கள் வளர்ப்போம்.

    எரி பொருட்க்கள் பயன்பாட்டை குறைப்போம்.

    தேவையற்ற வாகன பயன்பாட்டை குறைப்போம்.

    வாகனங்களை நஙு பராமரித்து வாகன புகையை குறைப்போம்.

    பிளாஸ்டிக் பொருட்க்களின் பயன்பாட்டை தவிர்ப்போம்.

    துணி காகிதம் மற்றும் சணல் பைகளை பயண்படுத்துவோம்.

    தொண்ணை காகிதம் மற்றும் சணல் டம்ளர்களை பயன்படுத்துவோம்.

    கழிவுகள் அதிகரிப்பதை தவிர்ப்போம்.

    கழிவுகள் உருவாகும் இடத்திலேயே அவற்றை தரம் பிரிப்போம்.

    காகிதம் போன்ற ஒருமுறை பயன்படுத்திய பொருட்க்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவோம்.

    சுற்றுபுற சூழலுக்கு நன்மை பயக்கும் பரிசு பொருட்களை பிறருக்கு கொடுப்போம்.

    பரிசுகளை சுற்றி கட்ட(கிஃப்ட் பேப்பர்) காகிதங்களையே(பிளாஸ்டிக் ஷீட் தவிர்த்து) பயன்படுத்துவோம்.

    முக்கியமாக பொது இடங்களில் மரம் வளர்ப்போம்.


    15ம் தேதி மாலையில் திரை இசை பாடல்கள் அந்தி மழை குழுவினரால் பொழியப்பட்டன.

Tuesday 10 August, 2010

சுதந்திர தினம் 2010 ஆகஸ்ட் 15

சுதந்திர தினத்தை கொண்டாட முயற்சித்து கொண்டிருக்கிறோம் நாங்கள் வசிக்கும் பகுதியில், சுற்று சூழல் பாதுகாப்பு பற்றி ஒர் நிகழ்ச்சி நடத்த முயற்சி எடுத்து வருகிறேன், 14 மற்றும் 15ம் தேதிகளில் விழாக்களும் கொண்டாட்டங்களும் நகரில் நடை பெறும், முடிந்தால் கலந்து கொள்ளுங்கள்.

Sunday 23 May, 2010

ParthibanSelvaraj Weds GeethaRani 23-05-2010

நமது நகரின் நலனில் பெரிதும் கவனம் செலுத்தும், நம் எல்லோருக்கும் பிரியமான, பாசமான, நேசமான, சீர்மிகுந்த நற்சிந்தனை உள்ள
திரு. செல்வராஜ் & திருமதி கீதா செல்வராஜ் அவர்களின் மூத்த குமாரன், திருவளர் செல்வன். பார்த்திபன் அவர்களது திருமணம்
திருமிகு செல்வி.கீதா ராணியுடன்
23-05-2010 அன்று திருவாரூரில் நடைபெற்றது. திரு, செல்வராஜ் அவர்களின் மேலுள்ள மரியாதை, அன்பு, பாசம், நட்பின் காரணமாக நமது நகரின் மக்கள் பெருந்திரளாக திருவாரூர்க்கே சென்று மணமக்களை ஆசீர்வதித்தனர்.
மேலும் 24-05-2010 அன்று நமது மண்ணிவக்கத்தில் உள்ள கற்பகாம்பாள் திருமண அரங்கில் நடை பெற்ற திருமண வரவேற்ப்பு நிகழ்சிக்கும் பெருந்திரளான மக்கள் வந்து மன மக்களை வாழ்தினர்

வாழ்வில் சிறக்க வாழ்துகள்.

நகர் மக்களுடன் மணமக்கள்
நகர் மக்கள் மணமக்களின் விசிறிகள்?

உலகம் போற்றும் உதாரன தம்பதிகளாக நூற்றாண்டுகள் வாழ்க!
தாயிற்ச்சிறந்த கோவிலும் இல்லை, தந்தை சொல்மிக்க மந்திரம் இல்லை

ஊராரும் உறவினரும் வாழ்த்த கல்யாண வைபோகம்

நமது நகர் வாழ் மக்களின் வாழ்துகளும் ஆசிகளும்

திரு & திருமதி நரசிம்மன் அவர்களின் ஆசிகள்

Saturday 24 April, 2010

Wedding Reception Of B.M.Pushpavathy and A.G.Saravanakumar

One of Our Nagar's Oldest Resident and Long time Nagar Social activist Mr.B.J.Mahendra's Daughter Ms.B.M. Pushpavathy's Wedding reception with Mr.A.G.Saravanakumar Held today(24th April 2010) At "Kammavar Kalyana Mahal" Purasaiwalkam, in a Grand Scale. All Our Nagar Residents, Friends, relatives and Well Wishers Of Mr. Mahendra and Mrs.Rama' Family Blessed the couple. Here are some Snaps:-

The Couple

கார்த்திக்,ஆனந்த்,தினகர்,மணமக்கள், திரு. ஹரிஹரன் ,திரு. ராஜாமணி.

நகர் வாழ் மக்கள் வாழ்த்து

நன்றி.

Sunday 17 January, 2010

சண்முகா நகரில் சமத்துவ பொங்கல் 16-01-2010

மண்ணிவாக்கத்தின் சொர்கபுரியாம் நம் சண்முகா நகரிலே, காணும் பொங்கல் தினத்தன்று சமத்துவப் பொங்கல் மிகவும் சிறப்பாகவும் சந்தோஷத்துடனும் கொண்டாடப் பட்டது. நமது நகரில் உள்ள பெரும்பாலான மக்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்று தமிழகத்தின் பாராம்பரியத்தை மீள் நினைவூட்டினர். தமிழக அரசில் பனியாற்றும் மக்கள் தொடர்பு ஆதிகாரி அவர்களும், மண்ணிவாக்கம் ஊராட்ட்சி மண்ற தலைவர் திரு.லோகநாதன் அவர்களும், முடிச்சூர் ஊராட்ச்சி மண்ற முன்னாள் தலைவர் திருமதி. நிர்மலா பாஸ்கர் அவர்களும், ஸ்ரீ நடேசன் வித்தியாசால துனை முதல்வர் திருமதி. உமா குருமூர்த்தி அவர்களும், திரு. புருஷோத்தமன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று விழாவுக்கு சுவை கூட்டினர். சண்முகா நகரின் மகளிர் சுய உதவிக்குழுவினர் பானைகளில் பொங்கல் இட்டு இயற்கைக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர். பொங்கல் விழா முடிந்ததும், சம பந்தி போஜனம் நடை பெற்றது, இதில் நகர் மக்கள் மட்டும் இன்றி முடிச்சூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள குழந்தைகளும் வந்திருந்து மதிய உனவு அருந்தி விழாவை சிறபித்தனர். மாலையில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கோலப்போட்டியும் நடை பெற்றது, இதில் கலந்து கொண்ட மகளிர் அனைவரும் சமத்துவத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தி கோலங்களில் தங்கள் திறமையையும், சீரிய சிந்தனையையும் வெளிப்படுத்தினர்.

இதோ விழாவின் காட்சிகள் உங்களுக்கு:-












விவசாயி போல காட்சி அளிக்கும் திரு. கோட்டீஸ்வரன்



நகர் குழந்தைகளின் ஒட்டக சவாரி

சங்கதின் முக்கிய தூன்,செயலில் இளமை மிக்க திரு. முத்துகுமார்
பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில்

நகர் மகளிர் பொங்கல் வைத்து இயற்கை வழிபாடு




பாரம்பரிய தமிழர்கள், திருமதி & திரு ஜோசப் பெஸ்கி
பொங்கலோ பொங்கல்

மாட்டு வண்டி சவாரி, பாரம்பரிய நினைவூட்டல்

முடிச்சூர் ஆதரவற்றோர் இல்ல தெய்வ சமான குழந்தைகள்

சிறப்பு விருந்தினர்கள்


குத்து விளக்கேற்றி பாரம்பரிய முறையில் இயற்க்கை வழிபாடு துவக்கம்



திரு ராதா அவர்கள் ஞாயிறு போற்றுகிறார்

சண்முகா நகரின் ஆனிவேர்கள், இவர்கள் இன்றி மேன்மை இல்லை


திரு புருஷோத்தமன், திரு லோகநாதன்

மக்கள் தொடர்பு அதிகாரி அவர்கள், திமதி நிர்மலா பாஸ்கர், சிறப்பு விருந்தினர்

திரு நரசிம்மன் அவர்கள் வரவேற்ப்புரை

திரு லோகநாதன் அவர்கள் உரை
மக்கள் தொடர்பு அதிகாரி அவர்கள் உரை


சம பந்தி போஜனம்


சமபந்தி உணவு காட்சிகள்

திரு லோகநாதன் அவர்கள் உணவு பரிமாறுகிறார்.
திருமதி நிர்மலா பாஸ்கர் உணவு பரிமாறுகிறார்

திரு புருசோத்தமன் அவர்கள் பரிமாறுகிறார்

அன்பு சகோதரிகளின் பாசம்


மகளிர் சுய உதவி குழுவினர் கலந்துரையாடல்


சமபந்தி போஜன காட்ச்சிகள்



சிறப்பு விருந்தினர்கள் சமபந்தி போஜனம்

கோலப் போட்டி துவக்கம்








சிந்தனையும் சீரும் சிறப்புமான கோலங்கள்





கோலப்போட்டிக்கான பரிசு பரிசீலனை

பரிசு விவரங்கள் எதிர்பார்த்து மகளிர் ஆவல்
திரு பெஸ்கி அவர்கள் வரவேற்ப்புரை
திருமதி உமா குருமூர்த்தி அவர்கள் சிற்றுரை


ஆவலோடு மகளிர் கூட்டம்


ஊராட்சி மன்ற தலைவர் பேருரை

சங்கத்தின் தலைவர் மகிழ் உரை

தலைவர் அவர்களுக்கு நினைவு பரிசளிக்கிறார் திரு நரசிம்மன்
நிர்மலா பாஸ்கர் அவர்களுக்கு நினைவு பரிசளிக்கிறார் திரு முத்துகுமார்.
உமா குரு மூர்த்தி அவர்களுக்கு நினைவு பரிசளிக்கிறார் திரு. ராமகிருஷ்ணா
முதல் பரிசு பெற்ற குழுவினர் சார்பாக
இரண்டாம் பரிசு பெற்ற குழுவினர் சார்பாக


மூன்றாம் பரிசு பெற்ற குழுவினர் சார்பாக

முதல் பரிசு பெற்ற குழுவினர்

மூன்றாம் பரிசு பெற்ற குழுவினர்

இரண்டாம் பரிசு பெற்ற குழுவினர்
இரண்டாம் பரிசு பெற்ற குழுவினர்

செயலாளர் திரு மணிகண்டன் நன்றியுரை