நமது நகர் பகுதி முழுவதையும் பசுமையாகவே பராமரிக்கவும் புவி வெப்பமயமாதலை தவிற்கவும் நமது நகரில் இயங்கிவரும் மகளிர் சுய உதவி குழுக்கள், ”முத்தமிழ்” “நம்பிக்கை” ”கருணை” ” கீதாஞ்சலி” ’சாதனை” ஆகியவையும், ஸ்ரீ சண்முகாநகர்,விரிவு மற்றும் திருவேங்கடம் நகர்
குடியிருப்போர் பொது நல சங்கமும், சென்னை வளசரவாக்கம் முல்லைவணம் TREEBANK இலவசமாக வழங்கிய 100 மரக்கண்றுகளை சென்னை போரூர் Alfa Engineering College மானவர்களுடன் இனைந்து நமது நகர் பகுதி முழுவதும் நட்டனர், மரக்கண்றுகளை நட்டதோடு மட்டும் அல்லாமல் அவற்றை செவ்வனே பாதுகாத்து பராமரிக்கவும் உறுதி பூண்டனர்.
திருமதி.சாந்தி நரசிம்மன் நிகழ்சிகளை நடத்தி செல்கிறார்
விழா பிரமுகர்களும் நகர் மக்களும்
திருமதி. ரஜினி கோட்டீஸ்வரன் பேசுகிறார்
திரு.கோட்டீஸ்வரன் பேச்சு
திரு.ஜோசப் பெஸ்கி பேசுகிறார்.
நமது நகரின் 10வது தெருவில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் மகளிர் குழுக்களின் ஆண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. M.D.லோகநாதன் அவர்கள்,துனைத்தலைவர் திரு. M.M.கிருஷ்ணன் அவர்கள் மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களுடனும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விழாவில் மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(படப்பை) மேலாளர், அரசு அதிகாரிகள், மண்ணிவாக்கம் ஊராட்சியின் முன்னாள் உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள்,மகளீர் குழு கூட்டமைபின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தந்தார்கள்.
திருமதி.சிவகுமர் பேச்சு
பட்டிமன்றம்
அண்ணன் தம்பிகள் எதிர் எதிர் அனியில், திரு நரசிம்மன், திரு ஜானகிராமன்
திருமதி. ஜோசப் பெஸ்கி
சிறுமிகள் நடனம்
சிறுவர் சிறுமியர் நடனம்
இந்த இரு நல்ல நிகழ்சிகளின் சிகரமாக அருமையான பட்டி மன்றம் (குழந்தைகளை வளர்ப்பதில் அக்கால முறை சிறந்ததா? இக்கால முறை சிறந்ததா? )மற்றும் சிறுவர் சிறுமிகளின் இசை/நடன நிகழ்சிகளுடன் CHRISTMAS விழா கொண்டாடப்பட்டது.
நமது நகர் பகுதியினை பசுமையாகவே பராமரிக்க முயற்சியெடுக்கும்/ உறுதி பூன்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்வாங்கு வாழ வேண்டும்.
2 comments:
Good to c the happenings eventhough missing it live
”ள்” க்கும் ”ல்” க்கும் வித்தியாசம் தெரியாத ஒருவர் பட்டிமன்ற நடுவர். நல்லதே நடக்கட்டும். நகர் மக்கள் அனைவருக்கும் தமிழர் திருநாள் நல் வாழ்துகள்.
Post a Comment