Sunday, 15 August 2010

64ம் விடுதலை நாள் 15 -08- 2010

இந்திய திரு நாட்டின் 64ம் விடுதலை நாளை நமது பகுதி மக்கள் சீரோடும் சிறப்போடும் 2 நாட்க்கள் திருவிழாவாக கொண்டாடி மகிழ்ந்தனர். 14-08-2010 அன்று நகர் சிறுவர்கள் கலை நிகழ்ச்சியும், நகர் மாந்தர்கள் நடித்த நாடகமும்
நடைபெற்றது.

15-08-2010 ஆம் நாள் இந்திய விடுதலை நாளை, ஊராட்சி மண்ற தலைவர் உயர் திரு. M.D.லோகநாதன் தலைமயில் நாட்டுக்கொடி ஏற்றி கொண்டாடிய நமது நகர் மாந்தர்கள், ஒரு முக்கிய நிகழ்வாக, புவியின் வெப்பத்தை குறைத்திடவும், பூமித்தாயை காத்திடவும் உறுதி எடுத்தனர். சென்னை CLAP(http://clapindia.blogspot.com/2009/03/claretian-life-animation-project.html) நிறுவனத்தின் வழிகாட்டுதலில், சண்முகா நகர் & விரிவு மற்றும் திருவேங்கடம் நகர் குடியிருப்போர்பொது நல சங்கம், சுதந்திர தின நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக சுற்று சூழல் விழிப்புணர்வு பற்றிய நிகழ்ச்சியை ஏற்ப்படு செய்து இருந்தது.

  • தோண்றிய 450 கோடி ஆண்டுகளாக நலமாக இருந்த பூமி சமீபகாலமாக மிகவும் மாசு அடந்து வருகிறது, தண்ணீர், காற்று, மண் ஆகியவை மாசடந்து மிகவும் மோசமான நிலையை நோக்கி போய்க்கொண்டிருக்கிண்றன. ஆகவே சுற்றுப்புற சூழல் விழிப்புணர்வு குறித்து பல் வேறு விஷயங்கள் விளக்கப்பட்டன, அவற்றில் சில:-

    தண்ணீர் மாசு

    உலகில் மூன்றில் ஒரு பகுதி மக்கள் தூய குடி நீர் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.

    அறிவியல் அறிஞர்கள் கருத்துப்படி 2025ல் மூன்றில் ஒரு பகுதி மக்களுக்கு தூய குடிநீர் கிடைப்பது அரிது.

    தூய நீர், பூச்சி கொல்லி மருந்து, தொழிற்சாலை கழிவுகளால் மசடைந்துள்ளது.

    இன்று ஒவ்வோர் இந்தியனும் 2 மில்லி கிராம் நச்சு பொருளை தன் உடலின் ஒவ்வொரு கிலோவிலும் சுமக்கிறான்.

    மரங்கள் வளர்பதின் அவசியம்

    ஒரு மனிதன் சுவாசிக்க 16 பெரிய மரங்கள் தேவை ஆனால் இந்தியாவில் 36 மனிதர்கள் ஒரு மரத்தை பகிர்ந்துகொள்கின்றனர்.

    மரங்கள் நிலத்தில் நீரை சேமிக்கின்றன. மரத்தின் வேர்கள் 33 சதவீதம் மழை நீரை சேமித்து வைக்கின்றன, எனவே

    மரங்கள் இல்லை என்றால் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வரும்.

    இந்தியா சீனா போன்ற நாடுகளில் பெரும்பாலன இடங்களில் ஆண்டுக்கு 1 1/2 மீட்டர் வீதம் நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது.

    காற்று மாசு.

  • மாசு பட்ட காற்றினால் சுமார் 22 லட்சம் மக்கள் ஒவ்வோர் ஆண்டும் மடிகின்றனர், அதிகரித்து வரும் வாகனங்களும்
    தொழிற்சாலைகளும் இதற்கு காரணம்.

    பூமியிலிருந்து சுமார் 5 அடி உயரம் வரை காற்று மிகவும் மாசடைந்துள்ளது, எனவே காற்று மாசினால் குழந்தைகள்
    அதிகம் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

    மாசடைந்துள்ள காற்றினால் பூமி மிகவும் வெப்பம் அடைகின்றது.

    புவி வெப்பம் 3 டிகிரி உயர்ந்தால் காடுகள் பாதிக்கும் மேல் அழிந்து சிதைந்து கார்பன் டை ஆக்சைடை வெளியிடதுவங்கும்.

    வெப்பம் காரனமாக வட தென் துருவங்க்களில் பனிக்கட்டிகள் உருகி கடல் நீர் மட்டம் உயரும். கடல் மட்டம் உயர்வதால் பல தீவுகள் காணாமல் போகும்.

    உலகில் உள்ள கடற்கரையோர பகுதிகள் கடலில் மூழ்கி விடும்.

    கடல் நீர்மட்டம் 1 மீட்டர் உயர்ந்தால் கடலோர பகுதிகளில் உள்ள 4 முதல் 8 கோடி மக்கள் வேறிடங்களுக்கு சென்றாக வேண்டும்.


    மண் மாசு.


    பூமியின் மேல் பகுதியில் உள்ள முதல் 6 அங்குல மண் தான் வளமானது.

    மரங்கள் வெட்ட படுவதால் இந்த மண் மழை நீரினால் அடித்து செல்ல படுகிறது.

    மேலும் பல தேவைகளுக்கு பூமியின் மேற்பரப்பில் உள்ள மண்ணை பயன் படுத்துவதால், நிலம் விவசாயத்திற்க்கு பயன் படாமல் போகிறது.

    விவசாய நிலத்தில் அதிக அளவு ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் பயன் படுத்துவதால் ஒரு குறிப்பிட்ட
    வருடங்களுக்கு பிறகு நிலம் பயனற்று போகிறது.

    ஒவ்வொரு நாட்டிற்க்கும் 33% நிலம் காடு வளர்பிக்கு தேவை படுகிறது.

    இந்தியாவில் உள்ள மொத்த நிலத்தில் 10.5 % தான் காடுகள் உள்ளன.

    இவற்றை தவிற்க்க பூமி தாயை காக்க மக்கள் எடுத்துக்கொண்ட உறுதி மொழி:-

    மரங்கள் வளர்ப்போம்.

    எரி பொருட்க்கள் பயன்பாட்டை குறைப்போம்.

    தேவையற்ற வாகன பயன்பாட்டை குறைப்போம்.

    வாகனங்களை நஙு பராமரித்து வாகன புகையை குறைப்போம்.

    பிளாஸ்டிக் பொருட்க்களின் பயன்பாட்டை தவிர்ப்போம்.

    துணி காகிதம் மற்றும் சணல் பைகளை பயண்படுத்துவோம்.

    தொண்ணை காகிதம் மற்றும் சணல் டம்ளர்களை பயன்படுத்துவோம்.

    கழிவுகள் அதிகரிப்பதை தவிர்ப்போம்.

    கழிவுகள் உருவாகும் இடத்திலேயே அவற்றை தரம் பிரிப்போம்.

    காகிதம் போன்ற ஒருமுறை பயன்படுத்திய பொருட்க்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவோம்.

    சுற்றுபுற சூழலுக்கு நன்மை பயக்கும் பரிசு பொருட்களை பிறருக்கு கொடுப்போம்.

    பரிசுகளை சுற்றி கட்ட(கிஃப்ட் பேப்பர்) காகிதங்களையே(பிளாஸ்டிக் ஷீட் தவிர்த்து) பயன்படுத்துவோம்.

    முக்கியமாக பொது இடங்களில் மரம் வளர்ப்போம்.


    15ம் தேதி மாலையில் திரை இசை பாடல்கள் அந்தி மழை குழுவினரால் பொழியப்பட்டன.

4 comments:

janibh said...

Thanks for the hot update.

Now or Never.

Save the Mother Earth.
Future is waiting for our Answer.

The Answer is hidden in your beautiful message Dear Krupa.

We Miss your Beautiful Photos!

Expanding city limits may rob the Lush green Environment of our landscape here!

Plant more Trees!
They are the real factories!
Oxygen Factories !

Now or Never!

Anonymous said...

well done, meaningfull celebration. much impressed. Thanks
david cmf

அம்பர் முருகன் said...

புவி வெப்பமாதல், சுற்று சூழல் விழிப்புணர்வு குறித்து உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
தொடரட்டும் உங்கள் பணி.

முருகன் சுப்பராயன்
மும்பை

yanmaneee said...

hermes belt
golden goose sneakers
christian louboutin
golden goose outlet
kate spade handbags
vapormax
kd 10
hermes belt
off white shoes
zx flux