Tuesday, 2 November 2010

தீபாவளியும் மாசு கட்டுப்பாடும்

கீழே உள்ள விஷயங்களை துண்டு பிரசுரமாக நகர்மக்களுக்கு வினியோகிக்க முயல்கிறேன். நகர் மக்கள் ஒத்துழைப்பார்களாக.

ஒலியினை குறைப்போம் செவியினை காப்போம்.

அன்பான வேண்டுகோள்
தீபாவளி பண்டிகை காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிக செவிட்டு தன்மையையும், தொடர் ஓசை நிலையான செவிட்டு தன்மையையும் ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே அதிக ஓசையுடன் வெடிக்க கூடிய வெடிகளான நைட்ரஜன் வெடிகள், புல்லட் வெடிகள், எலக்ட்ரிக் வெடிகள் மற்றும் தொடர் சர வெடிகளை(1000,5000,10000 வாலாக்கள்) தவிர்த்து ஒளி அதிகம் தரக்கூடிய மத்தாப்பு வகைகளை பயன்படுத்தி கொண்டாடுவோம்.

தீபாவளி பண்டிகையை கொண்டாடும் போது ”தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்” பொது மக்கள் மற்றும் குழந்தைகள் நலனுக்காக பின் வரும் ஆலோசனைகளை வழங்குகிறது.
  • இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.
  • குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம்.
  • பட்டசு வெடிக்கும் போது அருகிலேயே ஒரு வாளியில் தண்ணீர் நிரப்பி வைத்தல் நலம்(எதிர்பாராமல் ஏற்படும் தீயினை அனைக்க).
  • பட்டாசு வெடிப்பதனால் ஏற்படும் புகை மாசினால் நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள். ஆஸ்துமா, ஒவ்வாமை(அலர்ஜி) போன்றவைகள் ஏற்படும் வாய்புகள் உள்ளன.
  • 120 டெசிபல் ஒலி அளவுக்கு கீழ் உள்ள பட்டசுகளை மட்டுமே பயன்படுத்துதல் நல்லது.
  • மருத்துவமனைகள், பள்ளிகள், நீதி மன்றங்கள் ஆகிய இடங்களில் வெடிகள் வெடிக்க கூடாது.

முடிந்த வரை குறைவான பட்டசுகளையே உபயோகிப்போம்.

இயன்ற வரை பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்போம், துனி பைகளை உபயோகிப்போம். மழை நீரை சேகரிப்போம். மரங்கள் நட்டு வளர்த்து மண் வளம் காப்போம்.


தீபாவளி பண்டிகயின் போது நமது கவணக்குறைவினாலும் அலட்சியத்தினாலும், விபத்துகள் ஏற்படாமல் இருக்க அதிக சத்தமுள்ள பட்டசுகளை தவிர்த்து மாசற்ற தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம்.

ஒலி மாசு ஓர் உயிர் கொல்லி புகை நமக்கு பகை.

குறிப்பு:-பொது நலம் கருதி தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் வினியோகித்த பிரசுரத்தை தழுவியது.


மக்களால் மக்களுக்காக
54,சண்முகா நகர் மண்ணிவாக்கம்.