
பூக்கோலத்தோடு விழாக்கோலம்

மண்ணிவாக்கத்தின் சொர்க்கபுரியாம் நமது சண்முகாநகரிலே 16-01-2011 அன்று சமத்துவ பொங்கல் இதுவரை இல்லாத சீரோடும் சிறப்போடும் மிக பிரம்மாண்ட முறையிலே நமது நகர் மக்கள் அனைவராலும் சிறுவர் பூங்காவில் கொண்டாடப்பட்டது. நமது நகர் மகளிர் அனைவரும் இரவு பகலாக உழைத்து அழகான கோலங்கள் இட்டு விழா திடலை அலங்கரித்தனர்.

விழாத்திடல்

நகர் மக்களின் சிலம்பாட்டமும் பார்வையிடும் மக்களும்



ஆடவர்கள் அனைவரும் பொதுநல சங்கத்தினருடன் சேர்ந்து சுமார் ஒரு வார காலம் தங்கள் பங்களிபினை வழங்கி இந்த விழா மிகுந்த சிறப்பாக நடை பெற உழைத்தனர். திண்டுக்கல் இளைய நிலா தப்பாட்ட கலை குழுவினர் தங்கள் ஆட்டம் பாட்டங்களோடு இந்த பொங்கல் விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்த்தனர்.

அடுப்புகளை அருட்செல்வர் செல்வராஜ் பற்றவத்து துவக்குகிறார்.


பொங்கலோ பொங்கல்

விழாவிற்கு கடுமையாக உழைத்த வல்லவர்கள்

காட்சிகளை பதிவு செய்யும் சிவா அதை நோக்கும் ராகவன்.

தயாராகும் தப்பாட்ட கலைஞர்கள்.

கன்றை அடக்கும் காளை திரு.சுரேஷ்

மாட்டு வண்டி சவாரி

களை கட்டும் தப்பாட்டம்

பொங்கல் படையல்

மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு.M.D.லோகநாதன் அவர்கள், துனைத்தலைவர் திரு.M.M. கிருஷ்ணன், திரு. பொண்ணுசாமி மற்றும் ஊராட்சிமன்ற உருப்பினர்கள், மற்றும் பிரபலமான அரசியல் தலைவர்கள் திரு. புருஷோத்தமன், திரு செல்வம் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஞாயிறு போற்றும் திரு.லோகநாதன்