குடியிருப்போர் பொது நல சங்கமும், சென்னை வளசரவாக்கம் முல்லைவணம் TREEBANK இலவசமாக வழங்கிய 100 மரக்கண்றுகளை சென்னை போரூர் Alfa Engineering College மானவர்களுடன் இனைந்து நமது நகர் பகுதி முழுவதும் நட்டனர், மரக்கண்றுகளை நட்டதோடு மட்டும் அல்லாமல் அவற்றை செவ்வனே பாதுகாத்து பராமரிக்கவும் உறுதி பூண்டனர்.

நமது நகரின் 10வது தெருவில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவில் மகளிர் குழுக்களின் ஆண்டு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் மண்ணிவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திரு. M.D.லோகநாதன் அவர்கள்,துனைத்தலைவர் திரு. M.M.கிருஷ்ணன் அவர்கள் மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற உறுப்பினர்களுடனும் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விழாவில் மேலும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி(படப்பை) மேலாளர், அரசு அதிகாரிகள், மண்ணிவாக்கம் ஊராட்சியின் முன்னாள் உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள்,மகளீர் குழு கூட்டமைபின் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்து தந்தார்கள்.
நமது நகர் பகுதியினை பசுமையாகவே பராமரிக்க முயற்சியெடுக்கும்/ உறுதி பூன்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களும் வாழ்வாங்கு வாழ வேண்டும்.